Published : 25 Jun 2015 02:25 PM
Last Updated : 25 Jun 2015 02:25 PM
செய்தி:>செம்மொழி மாநாட்டையொட்டி வழங்கிய வீட்டுமனையை தரவில்லை: தேவநேயப் பாவாணரின் பேத்தி பரபரப்பு புகார்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மு.அரங்கநாதன் கருத்து:
மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் தனது இறுதி மூச்சு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். பிற மொழிக்கெல்லாம் மூலம் தமிழே என்றும், முதல் மனித இனம் தோன்றியது இலெமுரீயாவில் என்றும், நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளை ஒப்புநோக்கி வலியுறுத்தினார்.
எம்ஜிஆரின் ஆணைப்படி, இயக்குனராக பொறுப்பேற்று சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்கித் தந்தவர். இவர் தமிழ் வியாபாரி அல்ல. பணம் பொருள் நாடாத, தேடாத இந்த மொழித் தியாகியின் குடும்பத்திற்கு, மேடை போட்டு அறிவித்த பின்னர், கொடுக்காமல் அலைக்கழிப்பது அவரையே இழிவுபடுத்துவது போலாகும்.
அவரின் குடும்பத்தார்க்கு ஒரு வேண்டுகோள்! - அருள் கூர்ந்து அந்த வெற்றுத்தாளை பத்திரிக்கையாளர் முன்னிலையில் கிழித்தெறியுங்கள். பாவாணரின் உயிர்மம் அமைதியுறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT