Published : 02 Jun 2015 05:15 PM
Last Updated : 02 Jun 2015 05:15 PM
செய்தி: மாணவர் அமைப்பு தடை விவகாரம்: சென்னை ஐ.ஐ.டி-க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுவாமிதாசன் ஃபிரான்சிஸ் கருத்து:
ஊடக பரபரப்புகளுக்கு அப்பால், இது பற்றிய தகவல்களைப் படித்தால், அறிவு சார்ந்த சிந்தனைகளையும், விவாதங்களையும் ஐ.ஐ.டி தடை செய்திருப்பதாகவே தோன்றுகிறது. இந்து மதத்தில் உள்ள ஜாதி துவேசம் பற்றி அம்பேத்கார் எழுதியதைத்தான் அந்த மாணவர்கள் வினியோகித்துள்ளார்கள்.
அதில் தனக்குக் கிடைத்த ஒரு நகலை, மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி ஐ.ஐ.டி தலைமையின் பார்வைக்கு அனுப்ப, ஏதோ இதனால் இந்து மதத்துக்கே துவேசம் வந்து விட்டது போல் மாணவர் அமைப்பையே தடை செய்கிறார்கள். ஆக, இது அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கரின் எழுத்து சுதந்திரத்துக்கே போடப்பட்ட தடையாகிறது என்பது தான் உண்மை.
அரசியல், ஜாதி, மதம் என்பதையெல்லாம் தாண்டி, ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றுக் கருத்துக்களையும் விவாதிக்கும் இடமாக கல்விக்கூடங்கள் இருந்தால் தான் அது அறிவைப் பகிரும், பருகும் இடமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT