Published : 01 Jun 2015 04:09 PM
Last Updated : 01 Jun 2015 04:09 PM

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக பேசமாட்டீர்களா? - ஆர்.எம்.மனோகரன்

கட்டுரை:>மவுனமும் கொல்லும், சூச்சி!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.எம்.மனோகரன் மனோகரன் கருத்து:

ரோஹிங்கிய முஸ்லிம்கள்! இவர்கள் பர்மா தேசத்தவர்கள்.10 லட்சம் ஜனத்தொகை கொண்ட சமுதாயம். சொந்த நாடே இந்த ஒட்டு சமுதாயத்தையும் வெறுத்து துரத்துகிறது. காரணம் இவர்கள் வங்காளிகளாம்! வந்தேறிகளாம்! கடலைப் படகில் கடந்து அண்டை முஸ்லிம் நாடுகளான வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா சென்று தஞ்சம் கேட்டால் கதவடைக்கின்றனர்.

அவர்களுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை, உறைய இடமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? அவர்கள் அநாதைகளா? அகதிகளா? அவர்களும் ஆண்டவனின் படைப்புகள்தானே? அவர்களுக்கு ஏன் இந்த கதி? இந்த பூமி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம்தானே? இந்த சமுதாயத்திற்கு ஏன் எதுவுமே சொந்தமில்லாமல் போயிற்று?

ஐக்கிய நாடுகள் சபை இப்படிப்பட்ட நிர்க்கதியானவர்கள் வாழ்வில் ஒளியேற்ற திட்டங்கள் தீட்டவில்லையே ஏன்? மனித சமுதாயம் மௌனித்திருக்கிறது. ஐ.நா. கண்டுகொள்ளவில்லை. அந்த 10 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களின் எதிரில் வாய் பிளந்து நிற்பது மரணம்.

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக பேசமாட்டீர்களா? நாம் கையாலாகாத ஜென்மங்கள். மனித உரிமை பற்றி பேசுவோம். ஆனால் நம்மில் எவரிடமும் மனித நேயம் கிடையாது. ஏன்? நமக்கு மரணம் இல்லை என்ற நம்பிக்கையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x