Published : 18 Jun 2015 04:18 PM
Last Updated : 18 Jun 2015 04:18 PM

இயற்கைக்கு ஊறுவிளைவிக்கும் அணுக் கழிவுகள்: அபுபக்கர்

கட்டுரை:>ஏன் நியூட்ரினோ ஆய்வு அவசியம்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அபுபக்கர் கருத்து:

நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது அணு உலைக்கழிவுகளுக்கான பகுதியின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது எனில் இது நியூட்ரினோ திட்டமா, அணுக்கழிவு கிடங்கா?

அணுக்கழிவுகள் குறைந்த பட்சம் 30,000 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அக்கழிவுகளை இந்த மலைக்கு கொண்டுவரும் பயணமும் மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும் பேரழிவினை ஏற்படுத்தும் ஆபத்தினைக் கொண்டது. இயற்கைச்செல்வத்திற்கு ஊறுவிளைவிக்கத்தானா அழிக்கத்தானா இந்த கபட முயற்சிகள்..

மேலும், தேனிக்கு செல்லும் வழியில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு அருகே உள்ள ‘வடபழஞ்சி’யில் அணுக்கழிவு ஆய்வு மையத்தினை எதற்காக இந்திய அரசு துவங்குகிறது?

இப்பகுதிக்கும் அணு உலைகள் அமைந்திருக்கும் கல்பாக்கம், கூடங்குளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத பொழுதில் இது ஏன் இங்கு அமைக்கப்பட வேண்டும்? ஏன் தேவாரம் செல்லும் சாலையில் அணுக் கழிவுகள் குறித்த ஆய்வுக் கூடத்தினை இந்திய அரசு திறக்கவேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x