Published : 17 Jun 2015 12:54 PM
Last Updated : 17 Jun 2015 12:54 PM

நதிகளில் கழிவு சேர்க்கும் தொழிற்சாலைகள்: யேசுதாஸ்

கட்டுரை:>ஒரு நதியின் வாக்குமூலம்: பவானியைக் காக்க உணர்வுடன் திரண்ட மக்கள்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் யேசுதாஸ் கருத்து:

நதிகளின் மரணங்கள் ஜீரணிக்க முடியாதவை. நாகரிகங்களின் தாய்களே நதிகள் தான். நதிகள் வளர்த்துவிட்ட நாகரிகங்களே நதிகளை அழிக்கும் அசுரர்களாக வளர்ந்துவிட்டது கொடுமையானது. அது தவிர்க்க முடியாததும் கூட. பெற்ற தாய்க்கும் பிறந்த பிள்ளைகளுக்கும் இடையிலான வாழ்வா சாவா போட்டியாகிவிட்டது.

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியைப் பெருக்க தொழிற்சாலைகள் மிக அவசியம். மக்கள் வசதிக்காக உருவாகும் தொழிற்சாலைகள் மக்கள் நலனையே சூறையாட முனைப்புக் காட்டுவதுதான் வேதனை. நதிகளில் கழிவு சேர்க்கும் தொழிற்சாலைகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் நலன் காக்க வேண்டும்.

இது அறிவியல் வளர்ச்சிக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம். இதற்கு தீர்வுகாண வேண்டியதும் அறிவியலே. மெத்தனங்களையும் அலட்சியங்களையும் தள்ளிவிட்டு ஒட்டுமொத்த சமுதாயமும் இப்புனிதப் போரில் இறங்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x