Published : 19 Jun 2015 06:30 PM
Last Updated : 19 Jun 2015 06:30 PM
செய்தி: 290 புதிய பேருந்துகள், 55 சிற்றுந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரமேஷ் சர்கம் கருத்து:
அம்மாவின் 'அன்பு' கவனத்திற்கு: "நான் வொவொரு மாத பௌர்ணமி தினத்தன்றும், பெங்களூருவிலிருந்து, தமிழக அரசு பஸ் மூலம், கிரிவலம் செய்ய திருவண்ணாமலை செல்வேன். என்னைப் போன்று, பல பக்தர்களும், (ஆயிரக் கணக்கில்) கர்நாடகாவிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்த பயணம் மேற்கொள்கிறோம். இரண்டு குறைகள். 1) அந்நாளில் விடப்படும் பஸ்கள் பயணம் செய்ய தகுதி அற்றவை.
போன மாதம் பயணம் செய்தபோது, மழை அதிகம் பெய்ததால், பஸ்சின் உள்ளே நீர் வந்தவண்ண மிருந்தது. வாகனத்தை மாற்ற சொல்லியும் மாற்றாமல் பஸ் ஓட்டுனர் அப்படியே எங்களை தொப்பலாக திருவண்ணாமலை கொண்டு சேர்த்தார். 2) கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை வரை செல்லும் ரோடு, மிக மிக மோசமான ஒன்று. இன்று நேற்றல்ல, நான் இந்த வழியில் பல வருடங்களாக பயணிக்கிறேன்.
எந்தவித சீரமைப்பும் செய்வதில்லை. முடிந்தால், அம்மாவுக்கு பயணிக்கும் பக்தர்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால், ஒரே ஒரு முறை அரசு பஸ்ஸில் மேற்குறிப்பிட்ட தடத்தில் பயணிக்கவும். அப்பொழுது தெரியும் கஷ்டம் நேரடியாக. ஒரு சில லகரங்களை இந்த சாலை மேம்பாட்டிற்கு செலவு செய்து பயணிகளை காப்பாற்றவும். நன்றி. அண்ணாமலையார் உங்களை காப்பாற்றுவாராக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT