Published : 17 Jun 2015 10:49 AM
Last Updated : 17 Jun 2015 10:49 AM
'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலா கருத்து:
குடிப்பவர்கள் தானும் கெட்டு தனது குடும்பத்தையும் கெடுத்து கடைசியில் மாண்டு மண்ணுக்கு திரும்புகிறார்கள். என்ன பயன். பிறந்தும் இறந்தும் ஒரு பயனும் இல்லை. குடி விற்பவர்கள் எந்த பிரச்சினையை சந்திப்பது இல்லை. அங்கு குடித்து ஆட்டம் போட்டால் அடி தான் விழும்.
எனவே பணம் கொடுத்து அங்கு குடித்து விட்டு ரோட்டில் ஆடி அலைக்கழித்து குடும்பத்தினரை வேதனைப்படுத்தி, பாட்டிலை உடைத்து ரோட்டில் வீசி, மக்களின் காலை பதம் பார்த்து, இப்படி பல அட்டூழியங்களை செய்கிறார்கள் குடிகாரர்கள். சில சமயம் வாகனங்களை குடித்து விட்டு ஒட்டி எதிரில் வருபவர்களை மடிய செய்து, அல்லது தானும் மடிந்து, குடும்பத்தினரை நடு தெருவுக்கு கொண்டு வரும் குடிகாரர்கள் உண்டு.
மொத்தத்தில் குடியை அழிக்க வேண்டும். குடி உற்பத்தியை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு வேறு மாற்று தொழில் கொடுக்க வேண்டும். (குடியை விற்பவன் வீடு உருப்பட்டதில்லை என்ற வாக்கு உண்மை. பிறர் குடும்பத்தை அழித்து தான் செழிக்க என்பது நல்லதல்ல). அது அரசோ அல்லது தனிப்பட்டவரோ யாராகிலும் இது பொருந்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT