Published : 03 Jun 2015 06:45 PM
Last Updated : 03 Jun 2015 06:45 PM

இவர் எழுத்துக்கு டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஏராளம்: மதியழகன்

>ட்வீட்டாம்லேட்:>'வாழ்த்துகள்' சொல்லும் கருணாநிதியின் சிறப்பு அம்சங்கள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மதியழகன் கருத்து:

(1) பொதுவாழ்விற்கு வந்தவர்களுக்கு குடும்பம் அமைவதில்லை இவருக்கோ பெரிய குடும்பம்.

(2) ஒரு கஷ்டம் வந்தாலே கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர் இவருக்கு வராத கஷ்டமே இல்லை இருப்பினும் நாத்திகனாகவே வாழ்ந்து விட்டார்.

(3) கோயில் கோயிலாக ஏறி இறங்கியவர்கள் எல்லாம் அற்ப வயதில் போய்விட்டனர். நாத்திகனான இவருக்கோ 92 வயது.

(4) 33 வயது என்பது ஒரு தலைமுறை இவர் தற்போது மூன்றாம் தலைமுறையை முடித்து நான்காம் தலைமுறையை தொடவிரைகிறார்.

(5) சிறியதாக செய்த சாதனைகளுக்கு பெரிய விளம்பரம் தேடுபவர்கள் வாழும் காலத்தில் பெரிய சாதனைகளுக்கு கூட விளம்பரம் தேடிக்கொள்ளாதவர்.

(6) படித்து எழுதி டாக்டர் பட்டம் பெற்றவர்கள் சாதாரணம் இவர் எழுதியதை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஏராளம்.

(7) சினிமாவிற்கு வந்து ஊதாரியானவர்கள் தான் அதிகம் சிக்கனமாய் இருந்தவர் இவர் ஒருவரே. எல்லாவற்றிலும் இவர் ஒரு விதி விலக்கு! வாழ்க நூறாண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x