Published : 17 Jun 2015 10:48 AM
Last Updated : 17 Jun 2015 10:48 AM
செய்தி:>பெப்சி, கோக், கே.எஃப்.சி உணவுகளை ஆய்வுக்கு உட்படுத்துக: ராமதாஸ்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சிவா கருத்து:
தேவைதான், மறுக்க முடியாது. அப்படியே நம்ம ஊர் ஹோட்டல்கள், டீக்கடைகள் இவற்றில் தயாராகும் உணவுகளுக்கும் ஏதாவது தரம், அடிக்கடி சோதனை இவை தேவை. ஒரு சில ஹோட்டல்கள், டீக்கடைகள் தவிர மற்றவற்றில் உள்ள சுத்தம், சுகாதாரம் இவை கேள்விக்குறியே. இதை பற்றி கவலையே இல்லாத மக்கள் கூட்டம் இருப்பதால் வியாபாரம் குறைவின்றி நடக்கிறது.
கொஞ்சம் கவனித்தாலே இவர்கள் செய்யும் சில தவறான விஷயங்களை நாம் பார்க்கலாம். டீக்கடைகளில் மிக குறைந்த தண்ணீர் செலவில் ஏகப்பட்ட க்ளாஸ் கழுவுவதை பார்க்கலாம். மேலும் எண்ணெய் திரும்பத் திரும்ப உபயோகம் செய்வது. கண்ட கண்ட மாவுகளை மிக்ஸ் பண்ணுவது இவை நிறைய நடக்கிறது.
மேலும் நாம் பாக்கெட்டுகளில் வாங்கி சாப்பிடும் நிறைய சிப்ஸ், ஸ்நாக்ஸ் வகை தின் பண்டங்கள் எந்தத் தரக் கட்டுப்பாடும் இல்லாமல் தாரளாமாக விற்பனை ஆகின்றது. வெளிநாடோ உள்நாடோ எல்லோரும் தரமான சுகாதாரமான உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை எல்லாம் யோசித்தால் நாம் ஸ்டைலாக ஹோட்டலுக்கு சென்று காசை கரியாக்குவதை குறையும். கண்ட கண்ட நொறுக்கு தீனி தின்பதும் குறையும். எனவே நம்மூரு தின்பண்டங்களுக்கும் அரசின் தர சோதனை, கட்டுப்பாடு
மிகமிகத் தேவை..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT