Published : 02 Jun 2015 05:15 PM
Last Updated : 02 Jun 2015 05:15 PM

வாராக்கடன்களுக்கு பின்னணி அரசியலே: கண்ணன்

செய்தி:>நிதித் துறையின் பிரச்சினை மட்டும் அல்ல வாராக் கடன்கள்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கண்ணன் கருத்து:

அரசியல்வாதிகள் வங்கி மேலாண்மையில் குறுக்கிடுவது புதிதல்ல. உதாரணமாக மோசமான நிதிமேலாண்மையால் பாங்க் ஆப் தஞ்சாவூர் இந்தியன் வங்கியோடு இணைக்கப்பட்டது (எல்லாம் காங்கிரஸ் முறைகேட்டுத் திருவிளையாடல்தான். ஊழல்களை மறைக்கவேதான்) கருப்பையா மூப்பனார் ஆசியுடன் கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது பலநூறு கோடி கடன்களை அரசியல் சிபாரிசால் தகுதியில்லாதவர்களுக்கு தரப்பட்டது.

முறைகேடு தெரிந்தும், காங். தலைவர்கள் அவருக்கு ஆறு முறை பதவி நீட்டிப்புக்கு சிபாரிசு செய்தனர். இதனை சரி செய்ய அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டவேண்டியதாயிற்று. ஊழல்வாதிகளேன்னவோ வெளியில்தான் உள்ளனர். இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் உள்ளே தள்ளியிருந்தால் இப்போது இந்த வாராக்கடன் பிரச்னை பூதாகரமாயிருக்காது.

இப்போதுகூட வாராக்கடன்களை வசூலிக்க மாதிரி உத்தரவிட்டால் காங்கிரசாரின் நிழலில் உள்ளவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை, தொழில்மந்தத்தால் நிஜமாகவே பாதிக்கப்பட்ட முனைவோர்மீதே நடவடிக்கை! அதிகாரிகள் இன்னும் காங் விசுவாசிகளே. அவங்களுக்கும் கட்டிங் கிடைத்ததே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x