Published : 04 Jun 2015 06:57 PM
Last Updated : 04 Jun 2015 06:57 PM

ஐஐடி பெயரின்றி அறிக்கை விட்டிருக்கலாம்: எஸ்.நாகராஜன்

செய்தி:>ஐஐடி மெட்ராஸ் விவகாரத்தில் மவுனம்: நரேந்திர மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் நாகராஜன் கருத்து:

மாணவர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. 1965-இல் ஹிந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டக் குழு திமுகவால் உருவானதும், தமிழ்நாடு முழுவதிலும் அந்தப் போராட்டத்தால் கல்லூரி வளாகங்கள் ரணகளப்பட்டதும், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டதும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத உண்மைகள்.

இதுதான் மாணவர்கள் அரசியலில் ஈடுபட காரணமாக இருந்தது. அதன் பிறகு, தமிழ்நாட்டில் அத்தகைய மாணவர் போராட்டம் என்பது ஏற்படவே இல்லை. தமிழ்நாட்டில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு சில அமைப்புகளால் உருவாகும் உணர்வுப்பூர்வமான மாணவர் போராட்டங்கள் பலவும் சில நாள்களிலேயே தணிந்து அணைந்து போனதென்பதே உண்மை!

ஐஐடி-எம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் கல்லூரியின் அனுமதியின்றி, கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் அறிக்கை தயாரித்ததுதான் தவறாக ஐ ஐ டி நிர்வாகத்தால் தவறாக சித்தரிக்கப்பட்டது. ஐ ஐ டி பெயரை சேர்க்காமல் அ.பெ.வா.வட்டம் என்ற பெயரில் இவர்கள் எந்த ஒரு அறிக்கையும் விட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காதே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x