Published : 15 Jun 2015 05:49 PM
Last Updated : 15 Jun 2015 05:49 PM
கட்டுரை:>ஐடி உலகம் 1: கனவுலகின் இருட்டுப் பக்கங்கள்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் வி.காமேஸ்வரன் கருத்து:
சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது, துரத்தும் வேலை. வேலை ஆனதும் துரத்திவிடும் நிறுவனங்கள். ஐ டி எம்ப்ளாயீஸ் நிதானம் கடைபிடிக்க வேண்டும், நிதியை பத்திரப்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாய் தங்கள் தொழிலில் திறமையை வளர்த்துக்கொண்டு ஐ டி சார்ந்த விஷயங்களை அவ்வப்போது கூர்ந்து கவனித்து தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.
புற்றீசல் போல் இன்ஜினியரிங் கல்லூரிகள் தரம் இல்லாத கல்வி. கல்வி போதிக்கும் திறன் உள்ள ஆசிரியர்கள் மிகக் குறைவு. இதையெல்லாம் கடந்து வேலையில் சேர்ந்து வெற்றிக்கொடி நாட்டுவது சிரமம்தான். ஒரு காலத்தில் வங்கித்துறை ஊழியர்கள் சிறந்த வாழ்க்கை நடத்தினர்.
பணத்தின் அருமை தெரிந்ததால் சற்று நிதானத்துடன் முன்னேற்றம் கண்டனர் (துறை சார்ந்த சங்கங்கள் வழி நடத்தின) இப்போது ஐ டி நிறுவனங்கள் எந்தக் கட்டுப்பாடு சட்டங்களுக்கும் கட்டுப்படுத்தாத துறையாக விளங்குகின்றது. உடன் பணிபுரிபவரின் சம்பளம் என்ன என்றுகூட தெரியாது இதுதான் நிலை. அரசாங்கம், துறை மேல் அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புடன் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய தருணமிது. நாற்பது, ஐம்பது வயதில் ஊழியரை வெளியேற்றினால் வேறு வேலை தேட முடியாது உஷார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT