Published : 15 Jun 2015 05:50 PM
Last Updated : 15 Jun 2015 05:50 PM
செய்தி:>லலித் மோடி விசாவுக்காக சுஷ்மா 'மனிதநேய' உதவி: சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிரம்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் பி. பத்மநாபன் கருத்து:
"இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்ல விசா வழங்கக் கோரி இங்கிலாந்து அரசிடம் லலித் மோடி கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார்."- இது சரியா இருக்க முடியாது! போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல இங்கிலாந்து நாடு எப்படி விசா கொடுக்க முடியும்?
விசா என்பது ஒரு நாட்டுக்குள் நுழைய அந்நாடு சம்பந்தபட்டவருடைய கடவு சீட்டில் இடும் முத்திரை நுழைவு அனுமதியாகும் போர்சுகலில் மருத்துவ உதவி பெரும் மனைவியை லண்டனில் ஒளிந்துள்ள லலித் மோதி பார்க்க செல்ல லண்டனில் உள்ள போர்சுகல் நாட்டு தூதரகத்தில் தனது கடவுச் சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். போர்சுகல் நாட்டுக்குச் செல்ல விசாவுக்கு அந்நாடு தான்
வழங்கவேண்டும் என்ற நிலையில் "இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் மனைவியைப் பார்ப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்ல விசா வழங்கக் கோரி இங்கிலாந்து அரசிடம் லலித் மோடி கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார்." என்ற செய்தி சரியல்லவே?
ஆயினும் திருமதி சுஷ்மா "தன் மனைவிக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டு கையெழுத்திடுவதற்காக, லலித் மோடிக்கு உதவியதால் எனக்கு என்ன பலன் கிட்டும்? அவர் லண்டனில் இருந்தார். போர்ச்சுகல்லில் தனது மனைவியில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் லண்டன் திரும்பினார். அப்படியிருக்க, என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது?" என்று குறிப்பிட்டுள்ளதும் வேடிக்கைதான்.
லலித் மோடி இந்தியாவிலிருந்து 2011-இல் லண்டனுக்கு இந்திய கடவுச் சீட்டில்தான் சென்றிருக்க வேண்டும். பிறகு அவர் வர இந்திய திரும்ப மறுத்துவிட்ட நிலையில் "லலித் மோடிக்கு விசா உட்பட பயண ஆவணங்கள் வழங்க இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கடி கொடுத்தார். நானும் பரிந்துரை செய்தேன்" என்று வாஸ் கூறியதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது." என்பதும் குழப்பம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT