Published : 03 Jun 2015 06:46 PM
Last Updated : 03 Jun 2015 06:46 PM
செய்தி:>ரஜினி - ரஞ்சித் படத்தின் பின்னணி: 'லிங்கா' பாதிப்புக் குழு புதிய தகவல்கள்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆனந்தன் கருத்து:
புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர். எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும்.
காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகளாகவே தெரிகிறது.
இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT