Published : 13 Jun 2015 04:51 PM
Last Updated : 13 Jun 2015 04:51 PM
கட்டுரை:>தமிழ்க் கரையோரம் தடுமாறும் மலையாளம்!
'தி இந்து' தமிழ் ஆன்லைன் வாசகர் செ கருத்து:
நைஜீரியாவிலுள்ள இந்தியத் தூதரகம், ஜோர்தானிலுள்ள இந்தியத் தூதரகம், சிங்கப்பூரின் இந்தியத் தூதரகம், கே. எல்.லிலுள்ள இந்தியத் தூதரகம், எமிரேட்டிலுள்ள இந்தியத் தூதரகம், டோக்கியோவிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இலங்கை, கென்யா, தாய்லாந்து, எதியோப்பியா ஆகிய நாடுகளின் தூதரகம் எதிலும் மலையாளம் பேசப்படுவதை நான் கேட்டதே இல்லை.
ஒருவேளை அங்கே மலையாளிகள் இருந்தாலும் அதைப் பேச அவர்கள் விரும்பியதில்லை போலும். ஆனால், இந்திய வணிகம், பொருளாதாரம், கலைகள் தொடர்பான நிகழ்சிகள் கருத்தரங்குகள், விருந்துகள் போன்றவற்றுக்கு நான் அழைக்கப்பட்டு அங்கே சென்றிருந்தபோது, பலர் தமிழ் மொழியில் உரையாடுவதைக் கண்டேன்.
இல்லுபெஜு, லாகோஸ், நைஜீரியா திராவிடர் சங்கத்தில் பொங்கல் விழா, திருவள்ளுவர் திருநாள் என்று நடப்பதும், அங்குள்ள கோயிலில் திருவாசகத்தை கறுப்பின இறையன்பர் ஒருவர் பாடியவாறே இறைத் தொழுகை நடத்தியதையும் நான் கண்டேன். முதல்வர் ஜெயலலிதாவை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாராட்டிய லாரன்சு அண்ணாதுரை மலையாளத்தில் அந்தத் தவறைச் செய்யவில்லை. தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவுவதில் பற்றி எரிகிறது சிலருடைய உச்சி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT