Published : 17 Jun 2015 10:49 AM
Last Updated : 17 Jun 2015 10:49 AM
செய்தி:>திருச்சியில் காவிரியில் கலக்கும் கழிவுநீர்: தடுத்து நிறுத்த கோரிக்கை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் கார்த்தியின் கருத்து:
திருச்சியில் மட்டுமல்ல மேட்டூரில் ஆபத்தான இரசாயன ஆலைக்கழிவுகள் கலப்பதில் ஆரம்பித்து பின்னர் பவானி நகர் கழிவுகள், ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதி காகித, தோல், சாய ஆலைக்கழிவுகள், இந்நகரங்களின் கழிவுகள், பின்னர் திருப்பூர் சாய ஆலைக்கழிவுகளை சுமந்துவரும் காவிரியின் துணைநதியாம் நொய்யலுடன் சங்கமிக்கிறது.
அதன்பின் கரூர் நகரின் மொத்த சாக்கடை, சாய ஆலைக்கழிவுகளைத் தாங்கிவரும் அமராவதியுடன் கலந்து அதன்பின்னரே திருச்சி வந்துசேர்கிறது. இது ஏதோ இன்றோ நேற்றோ நடக்கவில்லை. காலம்காலமாக நடந்துகொண்டுதான் உள்ளது. இதுமட்டுமல்ல காவிரியில் இருந்து பிரியும் வாய்க்கால்களிலும் அதன் கரையில் உள்ள ஊர்களின் கழிவுகள் கலக்கின்றன. நம் மாநிலம் கழிவுநீரின் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதை பற்றி எந்த ஒரு கவலையுமில்லாமல் நமது ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் கர்நாடகத்தை கேள்வி கேட்பது வேடிக்கையாக உள்ளது. இதில் ஒரு முக்கியமான விசியம் இந்த கழிவுநீர் சேர்ந்த காவிரி நீரைத்தான் சென்னை முதற்கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் குடிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT