Published : 13 Jun 2015 04:42 PM
Last Updated : 13 Jun 2015 04:42 PM

பொழுதுபோகாதவர்கள் யோகா செய்யலாம் - அப்துல்கரீம்

செய்தி:>யோகா.. மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அப்துல்கரீம் கருத்து:

மோடி, குஜராத் மோடியாக இருந்த பொது, அவருடைய யோகாசன படங்கள் குஜராத் பத்திரிகைகளில் வந்தன. அவர் இந்திய பிரதமரான பிறகு இந்திய பத்திரிகைகளில் அவருடைய யோகாசன படங்கள் வருகின்றன. நாளை,175 நாடுகளின் பத்திரிகைகளில் அவருடைய படங்கள் வரலாம். அதனால் அவருக்கு தனிப்பட்ட வெற்றி என்று சிலர் பாராட்டலாம்.

ஆனால் அவருடைய இந்த தனிப்பட்ட வெற்றியால் இந்திய மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? ஒன்றுமில்லை! யோகா ஒரு உடற்பயிற்சி. அதை விரும்புகிறவர், அதற்காக நேரம் உள்ளவர்கள், குடும்ப சுமையே இல்லாதவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள், மறு வேலையே இல்லாதவர்கள், பொழுது போகவில்லையே என்று நினைப்பவர்கள் இந்த யோகா பயிற்சிகளை செய்யலாம்.

அப்படி யோகா பயிற்சிகளை செய்த பலவிதமான படங்களை செல்பி எடுத்து, ஊடகங்களுக்கு அனுப்பி மகிழ்ச்சியடையலாம். இது அவரவர் விருப்பம். தனிப்பட்ட விருப்பம் இதைத்தான் மோடி செய்திருக்கிறார். அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. அவ்வளவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x