Published : 02 Jun 2015 05:16 PM
Last Updated : 02 Jun 2015 05:16 PM
செய்தி:>இஸ்ரேல் செல்கிறார் நரேந்திர மோடி: இந்தியப் பிரதமர் அங்கு செல்வது இதுவே முதன்முறை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சி.மு.நட்ராயன் கருத்து:
நல்ல ஒரு சாதனை வீரராக மோடி அவர்களின் இஸ்ரேல் பயணம் அமையும் எனபதில் எந்த வித சந்தேகமும் இல்லை! இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்காரவாதிகளை ஒடுக்க நமக்கு உற்ற நண்பனாக இஸ்ரேல் இருக்கும்.
அதுமட்டுமல்லாது அதன் நுட்பமான தொழில்நுட்பம் நமது நாட்டுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை! மோடி அவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், இந்தியாவில் ஓடும் மகாநதி , கோதாவரி மட்டும் கிருஷ்ண நதியை ஒன்றாக இனைத்து காவேரியுடன் சேர்க்க வேண்டும்.
இதனை செய்யக் கூடிய ஆற்றல் இஸ்ரேல் நாட்டுக்கு உண்டு. நதி நீர் இணைப்பதற்கான இஸ்ரேலின் புதிய தொழில்நுட்பங்கள் சிறந்தவை. குறைந்த காலத்தில் குறைந்த செலவில் இந்த இணைப்பை செய்து முடிக்கும். மோடி அவர்கள் இதற்கு தவறாமல் ஒரு ஒப்பந்தத்தைப் போடவேண்டும். விவசாயம் குடிநீர் மின்சாரம் சிரிய நீர்வழி கப்பல் போக்குவரத்து ஆகியவைகளை இந்த இணைப்பால் செய்யமுடியும். எனவே இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணம் இத்தகைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT