Published : 21 May 2014 11:11 AM
Last Updated : 21 May 2014 11:11 AM
பாப்பா பொம்மை வச்சிருக்கீங்களா? பாப் கட்டிங், குட்டி ஸ்கர்ட் போட்டு க்யூட்டா இருக்கும். இது பாப்பாங்களுக்கு ரொம்ப பிடிச்ச பொம்மை. குழந்தைங்க டெடி பியர் போல இந்தப் பாப்பா பொம்மைய எப்பவும் தூக்கிகிட்டு நடப்பாங்க. அதைக் கொஞ்சுவாங்க. பேசுவாங்க. ஆனால், அது எதுவும் பேசாது. ஏன்னா, பாப்பா பொம்மைக்கு நம்மள மாதிரி உயிர் இல்லை. அதாவது, நம்மள மாதிரி மூச்சு விட முடியாது; ஆட முடியாது; ஓட முடியாது. ஒரு இடத்தில் உட்கார வச்சா, அந்த இடத்திலயே அது பாட்டுக்கு உட்கார்ந்திருக்கும். அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இல்லையா? சரி நம்ம கதைக்குப் போவோமா?
இந்த ‘தி ஸ்மர்ப்’ படத்துல குட்டிப் பாப்பா பொம்மை மாதிரி நிறைய பொம்மைங்க இருக்கு. நீங்க வச்சுருக்கிற பொம்மை மாதிரிதான். ஆனால், இதுக்கெல்லாம் உயிர் உண்டு. நடக்கும்; ஆடும்; பாடும்; உங்கள மாதிரி பயங்கரமா சேட்டையும் பண்ணும். இந்தப் பொம்மைங்கள ஸ்மர்ப் (The Smurfs) அப்படீன்னு சொல்வாங்க. அப்படீன்னா இது நாய்க் குட்டி, பூனைக் குட்டி மாதிரியான்னு கேட்குறீங்களா? கிடையாது. மிக்கி-மெளஸ் (mickey mouse) மாதிரி படத்துக்குன்னு உருவாக்குன பொம்மை கேரக்டர். சரியா சென்னா நம்ம டோரா மாதிரி.
இந்த மாதிரி குட்டி, குட்டி ஸ்மர்ப் எல்லாம் சேர்ந்து சந்தோஷமா இருக்குதுங்க. நாம வீட்ல தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் கொண்டாடுறோமில்லையா? அதுபோல ஸ்மர்புங்களுக்கும் ஒரு ஃபெஸ்டிவல் உண்டு. அது ‘புளூ மூன் டே’. எல்லா ஸ்மர்புங்களும் ஃபெஸ்டிவலுக்காக ரெடியாய்ட்டு இருக்குதுங்க. ஒரு ஸ்மர்ப் ஊரை அலங்காரம் பண்ணுது. சில ஸ்மர்ப் சேர்ந்து ஸ்வீட் எல்லாம் செய்யுதுங்க. இப்படி ஸ்மர்ப் ஊரே கொண்டாட்டமா இருந்துச்சு.
அப்ப பார்த்து ஸ்மர்புங்களோட எதிரியான ஒரு பூச்சாண்டி, ஸ்மர்புங்களைப் புடிக்க தன் பூனையோடு வரான். அந்தப் பூச்சாண்டி நம்மள மாதிரி இருப்பான். ஸ்மர்ப் நம்ம பொம்மை மாதிரி குட்டியா இருக்கும். அதனால் ஈஸியா புடிச்சிற முடியும்ல. ஆனாலும் எல்லா ஸ்மார்புங்களும் எப்படியோ பூச்சாண்டிகிட்ட தப்பிச்சு ஓடிடுதுங்க. அப்போ ஒரு ஸ்மர்ப் மட்டும் தப்பானா வழியில் போயிடுது. அதக் காப்பாத்த அதோட அப்பா, தம்பி, தங்கச்சிப் பாப்பா எல்லாம் போகுதுங்க. அந்தப் பாதை ஒரு பெரிய மலையில போய் முடியுது. கீழே முழுக்க தண்ணி. தப்பிப் போன ஸ்மர்ப் தவறி விழப் போக, அதை ஒரு தம்பி ஸ்மர்ப் பிடிச்சு, அதுவும் விழப் போகுது. அத இன்னொரு தம்பி ஸ்மர்ப் பிடிக்க, அதுவும் விழப் போக அத தங்கச்சிப் பாப்பா ஸ்மர்ப் பிடிக்க, அத அப்பா ஸ்மர்ப் பிடிக்க என ஒவ்வொண்ணா தவறி மலை உச்சில ஒரு மரத்தைப் பிடிச்சுட்டு தொங்குதுங்க. அதுவும் அந்தரத்தில.
அப்ப பார்த்து திடீர்னு அந்த பூச்சாண்டி அங்க வந்துர்றான். அவன் அந்த மரத்தைக் கைல எடுத்துடுறான். ஸ்மர்புங்களுக்குத் தான் அது மரம். பூச்சாண்டி நம்மள மாதிரிதான் இருப்பான் இல்லையா? அதனால அவனுக்கு அது செடி. இந்தப் பக்கம் விழுந்த பள்ளம். அந்தப் பக்கம் பூச்சாண்டி. என்ன செய்யுறதுன்னு தெரியாம ஸ்மர்ப் எல்லாம் பயத்துல கத்திட்டு இருக்குதுங்க.
ஸ்மர்ப்புங்க பூச்சாண்டிகிட்ட மாட்டிக்கிச்சா? கீழே தண்ணிக்குள்ள விழுந்துச்சா? எப்படித் தப்பிச்சதுன்னு படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT