Published : 06 May 2014 09:34 AM
Last Updated : 06 May 2014 09:34 AM

கண்ணுக்கு கண்ணான கணவன்... ‘பஞ்சா’வுக்கு கிடைத்த ‘சோணை’: 3 பேருக்குப் பார்வை கிடைக்கச் செய்த தொழிலாளி

மதுரையைச் சேர்ந்தவர் சோணை. கட்டிடத் தொழிலாளி. சக தொழிலாளி முத்து. நரம்புக் கோளாறால் சிறுவயதிலேயே ஒரு கண்ணில் பார்வையைத் தொலைத்தவர். இவர் மட்டுமின்றி, இவரது தங்கைகள் பஞ்சா, செல்வி இருவருமே இதே குறைபாட்டால் இரண்டு கண்களிலும் பார்வையைப் பறிகொடுத்தவர்கள். பஞ்சா பி.எட். வரை படித்துவிட்டு தனியார் பள்ளியில் தற்காலிக வேலையில் இருந்தார். இவரது அக்கா செல்விக்கு படிப்பறிவு கம்மி.

கண் தெரியாத பிள்ளைகளை எப்படி கரைசேர்க்கப் போகிறோம் என்று அவர்களது பெற்றோர் மருகிக் கிடந்தார் கள். அவர்களுக்கு இயற்கை காட்டிய ஒளிவிளக்குதான் சோணை.

சோணைக்கு ஒரு அண்ணன் இருப்பதை அறிந்த முத்து ஒருநாள் சோணை யிடம் பேச்சுவாக்கில், ‘‘நீயும் உங்க அண் ணனும் என் தங்கச்சிகளுக்கு வாழ்க்கை குடுப்பீங் களா?’’ என்று கேட்டி ருக் கிறார். பிறகு நடந்ததை சோணை விவரிக்கிறார்..

‘‘முத்து குடும்பத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அண்ணனுக்கு சம்ம தம்னா எனக்கு சம்மதம்னு சொன்னேன். அண்ணன்கிட்டயும் எடுத்துச் சொன்னேன். மொதல்ல ஒப்புக்கிட்ட அவரு அப்புறம் மாட்டேன்னுட்டாரு. வீட்டுல மத்தவங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

‘அவ கட்டட்டின்னு இருப்பா. நீ வளர்த்தி. ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. கல்யாணமானா குழந்தை பிறக்கா துன்னு ஜாதகத்துல இருக்கு’ அப்படி இப்படின்னு சொல்லி கலைக்கப் பார்த்தாங்க.

எங்கம்மா காலை லேசா சாய்ச்சு சாய்ச்சுத்தான் நடப்பாங்க. ‘கண்ணு தெரியாத பொண்ணைக் கட்டணும்னு ஒனக்கு தலையெழுத்தாடா?’ன்னு அவங் களே கேட்டாங்க.

‘அப்பா இப்புடி நினைச்சிருந்தா ஒனக்கு கல்யாணம் ஆகிருக்குமான்னு திருப்பிக் கேட்டேன். அவங்களால பதில் சொல்லமுடியல.

எதிர்ப்பை மீறி திருமணம்

எல்லா எதிர்ப்பையும் மீறி பஞ்சாவும் நானும் மதுரை பூங்கா முருகன் கோயில்ல 2012 மே 23-ம் தேதி மாலை மாத்திக் கிட்டோம். எங்க வீட்டுல இருந்து யாருமே கல்யாணத்துக்கு வரல.

கல்யாணம் முடிஞ்சு அஞ்சே மாசத்துல பஞ்சாவுக்கு கவருமென்ட் வேலை கிடைச்சிருச்சு. ஒரே வருஷத்துல அழகான ஆண் குழந்தையை பெத்துக் குடுத்தாங்க பஞ்சா. அப்புறம்தான் பஞ்சாவுக்கு பார்வை வரவைக்கிற முயற்சியில இறங்கினேன்.

பஞ்சாவின் பெரிய மனசு

‘மொதல்ல என் அண்ணனுக்கும் அக்காவுக்கும் பார்வை வரணும்’னு பஞ்சா சொல்லிட்டாங்க. அதனால, மொதல்ல முத்துவுக்கும் செல்விக்கும் கண் தானம் மூலமா கண்களை பெற்று 2 பேருக்கும் ஒரு கண்ணுல பார்வை வரவைச்சிட்டோம். கடைசியா பஞ்சாவுக்கும் கண் தானமா கிடைச்சிது. அவங்களுக்கும் இப்ப ஒரு கண்ணுல பார்வை வந்திருச்சு. மூணு பேருக்குமே இன்னும் 6 மாசத்துக்குள்ள இன்னொரு கண்ணுலயும் பார்வை வந்திடும்’’ உற்சா கம் பொங்க சொல்லி முடித்தார் சோணை.

கணவர்தான் பொக்கிஷம்

‘‘எனக்கு கிடைச்சாப்புல கணவர் வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடைச்சிருக்காது. கண்தான் பெரிய பொக்கிஷம்னு நெனச்சிட்டி ருந்தேன். என் கணவர் அதுக்கும் மேலான பொக்கிஷம்’’ பொங்கி வந்த கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டார் பஞ்சா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x