Published : 21 May 2015 02:37 PM
Last Updated : 21 May 2015 02:37 PM
செய்தி :>புவி வெப்பமடைதலால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஒபாமா எச்சரிக்கை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் தங்கராஜ் கருத்து:
உலகில் பல இடங்களில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் ஆஸ்ரேலியாவில் அடிக்கடி ஏற்பட்ட காட்டு தீயும் உலகில் சுழன்று கொண்டிருந்த காற்றின் சுழற்சியை திசை மாற்றி இருக்கிறது.
அதனால் மழை அதிகம் பெய்த (கேரளா போன்ற) இடங்களில் குறைவாகவும், குறைவாக பெய்த (தமிழ் நாட்டை போன்ற ) இடங்களில் அதிகமாகவும், நேரம் தவறிய மழையும் பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. இதனால் குளிரான இடங்கள் வெப்பமாகவும், வெப்பமான இடங்கள் குளிராகவும் மாறும்.
இது ஒருபுறமிருக்க சமீப காலங்களில் இந்தியாவும் சைனாவும் தொழில் துறையில் போட்டிபோட்டு முன்னேறுவதால், நாம் காற்றை மாசு படுத்துகிறோம் என்று அமேரிக்கா போன்ற நாடுகள் கடுப்பாகி குறைகூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலே உள்ளவன் கீழே வருவதும் கீழே உள்ளவன் மேலே செல்வதும் இயற்கையின் நீதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT