Published : 07 May 2015 03:19 PM
Last Updated : 07 May 2015 03:19 PM

பணம் இருந்தால் சட்டத்தை மீறலாமா? - பூங்கொடி

செய்தி:>சல்மான் ஒரு நடிகர்... அதிகபட்ச தண்டனை வழங்காதீர்: வழக்கறிஞர் வாதம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பூங்கொடி கருத்து:

காரில் செல்லும்போது நாய் குறுக்கே ஓடிவந்து இறந்தால் என்ன செய்ய முடியும் என்று பொறுப்பற்று பேசியவருக்கு தண்டனை குறைவு தான். சக உயிரினத்தை மதிக்க தெரியாதவருக்கு காசுக்காக வாதிடும் வக்கீல்களை என்ன செய்வது. நடைபாதையில் வசிப்பவர்கள் மனிதர்கள் இல்லையா.

பொழுது போக்க ஏழை எளிய மக்கள் காசு கொடுத்து திரை படம் பார்த்ததனால் தான் இன்று கோட்டீஸ்வரன் ஆனார். அவரால் உயிர் இழந்தவர்களுக்கும், பாதிக்கப்படவர்களுக்கும் அவரது தொண்டு நிறுவனம் என்ன செய்தது.

அவருக்கு எதிராக பாதுகாப்பு பணியில் இருந்த ஏழை கான்ஸ்டபிளை மிரட்டவும் அச்சுறுத்தவும் தானே அவரது பணம் உதவி செய்தது. பணம் இருப்பதால் தானே சட்டத்தை மீறச் சொல்கிறது.

தொண்டு நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு அவர் எந்த மாதிரி அன்பையும் பாதுகாப்பையும் வழங்கிடுவர். அவருக்கு எதிராக எவரேனும் கிளம்பினால் அவர்களின் கதி என்ன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x