Published : 09 May 2015 02:47 PM
Last Updated : 09 May 2015 02:47 PM

டிசிப்லின் என்னவிலை? - ஆர்.எம்.மனோகரன் மனோகரன்

கட்டுரை:>காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.எம்.மனோகரன் மனோகரன் கருத்து:

சப்-வே அமைத்துக்கொடுத்தால் அதில் இறங்கி சாலையைக் கடப்பதில்லை. சப்-வே இல்லாத இடங்களில் சாலையைக் கடக்க வெள்ளைக்கோடு போட்டுக்கொடுத்தால், அதைக் கண்டுகொள்ளாமல் கண்ட இடங்களில் சாலையைக் கடக்கும் மனப்பான்மை. கியூவரிசையைப் பின்பற்றுவது அதர்மச் செயல்.

மேல் நடைபாதை (ஓவர்-பிரிட்ஜ்) இருந்தால் அதையும் உபயோகப்படுத்துவது இல்லை. பேருந்துகளில் உட்கார இடம் இருந்தாலும் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்வது எங்கள் பிறப்புரிமை. பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால் அடுத்த பஸ்சிற்காக காத்திராமல் பஸ்களில் தொங்கிக்கொண்டு பயணிப்போம். இதற்கெல்லாம் காரணம் என்ன?

இவை தீயவை என்று சொல்லிக் கொடுக்க காந்தி, புத்தர் போன்றோர் தேவையில்லை. டிசிப்லின் - அதுதான் தேவை. நாமும் நமது வளர்ப்பும் டிசிப்லின் சார்ந்து இருத்தல் வேண்டும். டிசிப்லின் - அது என்ன விலை என்று கேட்கும் சமுதாயத்தில் அதைப்பற்றிப் பேசுதல் அர்த்தமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x