Published : 19 May 2015 06:40 PM
Last Updated : 19 May 2015 06:40 PM

பாதுகாப்பில் அரசு கவனம் தேவை: சையது மொஹம்மது

செய்தி:>சதுரகிரி விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சையது மொஹம்மது கருத்து:

இது போன்ற அசம்பாவித காலங்களில் பாதுகாப்பு குறைபாடுகள், முறையான பராமரிப்பின்மை, ஒழுங்குமீறிய அனுமதிகள், வரைமுறையற்ற நகர் மயமாக்கல் என பல குற்றச் சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அடுத்து சில நாட்களில் எதுவுமே நடவாதது போல் வாழப் பழகுகிறோம். அண்மை நேபாள நிலநடுக்கத்தை முன்னிலைப்படுத்தி ஹிந்துவின் கட்டுரையும் இந்த அரசு-சமுக தரப்பிலான அலட்சியத்தை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தது.

ஆனால் இது வரையிலும் எவ்வித சிறு அசைவையும் அரசு தரப்பிலிருந்து காணோம். இது நமது ஆளும் திறனையும், அதிகார ஆளுமையும், வாழும் இயல்பையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ள ஒரு சூழல். அரசு, அமைப்பு, சுற்றுச்சூழல், சட்டம் என நாம் வகுத்திருக்கிறோம். அவை எல்லாம் மக்களுக்கான சகல ஏற்பாடுகள்தான். இந்த ஏற்பாடுகளை மீறி அசம்பாவிதங்கள் நடக்கிறதென்றால் நம்மிடையே இரண்டு குறைகள் தான் இருக்க முடியும்.

ஒன்று நமக்கு மக்கள், மனித உயிர், மக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு பற்றிய அறிவற்ற நிலையில் அரசு உள்ளது அல்லது அலட்சியத்தில் உள்ளது. 2வது நம்மிடையே நாம் வாழும் பகுதியில் வளமற்று வசதியற்று நிர்கதியாய் நிற்கிறோம். மக்கள் பாதுகாப்பில் அரசின் கவனம் தேவை. வளத்தில் இந்தியா முன்னுக்குள்ளது என்பதை பறைசாற்றி பல சிறு நாடுகளுக்கு உதவி செய்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x