Published : 19 May 2015 06:41 PM
Last Updated : 19 May 2015 06:41 PM
செய்தி:>மோனோ ரயில் பாதுகாப்புக்கு ரூ.76 லட்சம் செலவு: ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு எம்எம்ஆர்டிஏ பதில்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுகுமார் கருத்து:
மோனோ ரயில் பாதுகாப்புக்கு ரூ.76 லட்சம் செலவு என்பதைப் படித்த பிறகும் முதல்வர் ஜெயா பிடிவாதமாக மோனோ ரயில் வேண்டும் என்றால் தமிழ் நாட்டின் தலை எழுத்தை யாராலும் மாற்றமுடியாது. எம் ஆர் டி எஸ், மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் எல்லாம் பிராட் கேஜ், எல்லா ரயில்களும் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல இணைக்க முடியும்.
மோனோ ரயில் மட்டும் அதனுடைய பாதையில் மட்டும் தான் போகும். அது மட்டும் இல்லாமல் மெட்ரோ ரயிலில் ஒரு மணி நேரத்தில் 40,000 பேர் பயணிக்கலாம் ஆனால் மோனோ ரயிலில் ஒரு மணி நேரத்தில் 10,000 பேர் மட்டுமே பயணிக்க முடியும். எனவே மோனோவைவிட மெட்ரோ சிறந்தது என்பதை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு காழ்ப்பு உணர்ச்சி பார்க்காமல் மோனோ ரயில் திட்டத்தை கைவிட்டுவிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை ஆரம்பிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு இடவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT