Published : 13 May 2015 07:17 PM
Last Updated : 13 May 2015 07:17 PM
கருத்துக் கணிப்பு:>மோடியின் சீனப் பயணத்தின் பலன் எப்படி இருக்கும்?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலசுந்தரம் கருத்து:
பிரதமர் மோடி அவர்களுக்கு பதவியில் ஒரு வருட அனுபவம் மட்டுமே. இவர் அதிகாரிகள் சொல்லுவதையோ, ஆலோசகர் சொல்லுவதையோ கேட்பவராக இதுவரை தெரியவில்லை. போகும் நாடுகளில் தனது விஜயம் பெரிய அழுத்தம் தரவேண்டுமென முயல்கிறார். ஆனால் இவரால் இதனை சாதிக்க முடிவது இல்லை.
இவர் இன்னமும் பக்குவம் பெற சில ஆண்டுகளாவது பொறுத்திருக்க வேண்டும். இவர் நிறையை தன்னை திருத்தி கொள்ள வேண்டியுள்ளது. இன்னமும் தேர்தல் கால பரப்புரை பாணியிலேயே இருந்து வருகிறார். உலகத் தலைவர்கள் வரிசையில் நேரு இந்திரா போல் இடம் பெற இவர் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.
சீன விசயத்தில் மட்டும் அல்ல பாகிஸ்தான், இலங்கை பங்களா தேஷ், ஆப்கன் போன்ற நாடுகள் விசயத்திலும் கூட இவர் வெற்றி பெற இன்னமும் தன்னை கடுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நம் இந்தியர்கள் கூட்டத்தை கூட்டி கை அசைத்து தான் வரமுடிகிறது. சீனர்களை அசைத்து விட்டு இவரால் வர முடியாது. அதற்கு மேலும் இவர் தயார் ஆக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT