Published : 27 May 2015 06:15 PM
Last Updated : 27 May 2015 06:15 PM

2-வது திருமணம் அப்பட்டமான மனித உரிமை மீறல் - முத்து

செய்தி:>மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால் 2-வது திருமணம் செய்த கணவர்: நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா

'தி இந்து' ஆன்லைன் வாசகர் முத்து கருத்து:

ஆண்மையின் கடமையை நிறைவேற்ற தவறிய ஓர் மனித மிருகம் ஆண் குழந்தை கேட்கிறது. சமூக அவலம்.... கடந்த வாரம் தி இந்து செய்தியில் கணவனின் ஒத்துழைப்புடன் கனரக வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்ட மனைவி என்று செய்தி படித்தேன். அப்படிப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள்.

ஆனால், இம் மனிதனின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல், சமுதாய சீர்கேட்டை உருவாக்கும், இப் பெண் மற்றும் இம்மூன்று பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.

சட்டத்தின் உதவியை நாடியது இப்பெண்ணின் மனோ தைரியத்தையும் போராட்ட குணத்தையும் காட்டுகிறது. அரசு இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் இதே பத்திரிக்கையில் வேறு ஒரு மோசமான செய்தியை படிக்க நேரிடும். பெண் கல்வி என்பது மிக மிக முக்கியமான தேவை ஆகிவிட்டது.

இத்தகைய சூழ்நிலைகளில் பெண்ணிற்கு தான் பெற்ற கல்வி உதவியாக இருக்கும். தற்பொழுது பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி நிறைய படிக்கிறார்கள். ஆனால் கூடவே ஆண்கள் போலவே உணர்ச்சியின் வயப்பட்டு காதலிக்கிறேன் என்ற போர்வையில் சீரழிகிறார்கள். சமீபத்திய உதாரணம் மனைவியே கணவன் மற்றும் குடும்பத்தாரை வீட்டில் தீ வைத்து கொளுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x