Published : 29 May 2015 04:40 PM
Last Updated : 29 May 2015 04:40 PM
செய்தி:>கல்விபொறியியல் கல்லூரிகள் தரம் கவலை அளிக்கிறது: ஸ்டாலின்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மணிகண்டன் கருத்து:
ரவுடிகள், மதுபான ஆலை, கடை, பார் வைத்திருந்தவர்களிடம் எப்பவோ சிக்கிவிட்டாள் சரஸ்வதி. உங்கள் ஆட்சியில் தெரியவில்லையா? கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளை பணம் கொழிக்கும் தொழிலாக மட்டுமே பார்கிறார்கள். தகுதி இல்லாதவர்களை மாணவர் ஆக்குகின்றனர்; தரம் இல்லாதவனை பட்டதாரி என்கிறார்கள்.
இரத்தம் சிந்தி படிக்கவைத்தவர் தெருவில் நிற்கிறார்கள் உங்கள் பேராசையால். உங்களிடம் படித்தற்கு தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கலாம். சட்டம் தெரிந்து தவறு செய்யும் கல்வித் தந்தைகளை என்ன செய்யமுடியும் ஏழைகளால்?
என்னுடைய பிஇ சான்றிதழே 3 வருடம் போராடித்தான் 'தி இந்து தமிழ்' மூலம் கிடைத்தது (நன்றிகள் பல ஆசிரியர்கள், செய்தி சேகரிப்பாளர் லிஸ்பன் குமார் அவர்களுக்கும்). கல்வித்துறையின் லட்சணம் இதுதான். நாளைய சமுதாயத்தை வைத்து உலக வங்கிகளில் கடன் வாங்க வேண்டுமே என்ற சுயநலத்திற்காகவாவது அரசு கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT