Published : 30 May 2015 02:45 PM
Last Updated : 30 May 2015 02:45 PM

செல்போன் கற்பித்தலுக்கு எதிரியே: பானுமதி

கட்டுரை:>வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பானுமதி கருத்து:

எந்த வகையிலும் செல்போன் கற்பித்தலுக்கான கருவியாக சிறப்பாக செயல்பட வழியே இல்லை. மாறாக மாணவர் மத்தியில் செல்போனைத் தவறாக பயன்படுத்தவும் தவறான வழிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை மாணவர் மத்தியில் பரப்பும் தீமையே அதிகம்.

முக்கியமாக கற்பித்தலின் போது கவனம் ஆசிரியர், மாணவர், கற்பிக்கப்படும் பாடப் பகுதி ஆகிய முக்கோணத்தில் கவனச் சிதறல் செய்யும் கருவிகளில் முதன்மையானது போன். எனவே, செல்போன் கற்பித்தலுக்கு எதிரியே.

ஆசிரியர் சக ஆசிரியர்களிடம் பகிரும் விசயங்கள், மற்றும் கற்பித்தலுக்கு தேவையான தயாரிப்புகள் கற்பித்தல் நடப்பதற்கு முன்னரே வகுப்பறைக்குள் நுழையும் முன்பே ஆசிரியர் தயாரித்து செல்லவேண்டும் என்பது எந்த நல்லாசிரியருக்கும் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x