Published : 21 May 2015 02:37 PM
Last Updated : 21 May 2015 02:37 PM

ஒரினச் சேர்க்கை உயிரினங்கள் உலகில் ஏராளம்: கண்ணன்

செய்தி:>தன்பாலின உறவாளர் மகனுக்கு வரன் தேடும் தாய்: நாட்டிலேயே முதன்முறையாக விளம்பரம் வெளியீடு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கண்ணன் கருத்து:

சில மிருகங்கள் / தாவரங்களே unisexual ஆகும் (குப்பைமேனி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள்) அவற்றில் ஒரே உடலில் அல்லது செடியில் ஆண் மற்றும் பெண் பூக்கள் உண்டு. ஆண் பெண் இரு பாலினத்துக்கும் உரிய பாகங்களான சினைப்பையும் மகரந்தகளும் இருக்கும். சில உயிரினங்கள் முதலில் ஒரு பாலினமாக இருந்து நாளடைவில் வேறு பாலினதுக்கு மாறுமாம்.

ஒரே பாலினச் சேர்க்கை உள்ள உயிரினங்கள் உலகில் ஏராளம்; சேர்க்கையே இல்லாமல் பெருகும் தாவரங்களும் உண்டு. பல்வேறு மதங்களில் உள்ள மெய்ஞானிகளால் இதை அறியமுடியாது, விஞ்ஞானிகள் இதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர்களோ சக்தியும் சிவனையும் ஒரேவுடலில் உமையொரு பாகனாகப் பார்த்தவர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே அறிவியல் அறிந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x