Published : 19 May 2015 06:41 PM
Last Updated : 19 May 2015 06:41 PM

நல்லவனாக நடிக்கும் அமெரிக்காவிடம் உஷார்: வள்ளுவன்

கட்டுரை:>சீன - இந்திய உறவின் முக்கியத்துவம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வள்ளுவன் கருத்து:

அந்நாட்களில் மிகவும் சுமுகமான மாவோ-நேரு உறவில் சீன ராணுவ தளபதிகளை கைக்குள் போட்டு கும்மியடித்தது நிச்சயம் ஏதோ ஒரு வல்லரசு போல தோன்றுகிறது..

இம்முறை ஏதும் ஏடாகூடம் நிகழாமல் இருதரப்பும் மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டும்.. பாகிஸ்தானை தூண்டி தீவிரவாதிகளை இங்கு அனுப்பி குண்டுகள் வெடிக்க வைத்து இந்தியாவைக் கடுப்பேற்றி, சீனாவை பாகிஸ்தானுக்கு உதவவைத்து.. அமெரிக்கா இரு நாடுகளுக்கும் நல்லவன் போல பஞ்சாயத்து பண்ணி உதவி. செய்வதுபோல் நடிக்கும். பின் நமக்கே தெரியாது நாம் என்ன நோக்கத்தில் சண்டை போடுகிறோம் என்று..

ஆனால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆகியவற்றின் நலன்கள் மாத்திரம் அச்சண்டையின் ஊடாக பாதுகாக்கப்படும்.. எனவே அமெரிக்காவிடம் உஷார். மேலும் கவனம் கவனம் மிகக் கவனம் ஆசிய நாடுகளின் சகல ராஜதந்திர முயற்சிகளும்!! இந்த முயற்சியை வெற்றி பெற வைத்து காப்பாற்றவேண்டும் எம்மை இறைவா!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x