Published : 06 May 2015 06:10 PM
Last Updated : 06 May 2015 06:10 PM

சாலைவிதிகளை பின்பற்றாத நம் மக்கள்: அப்துல் ஃபாதா

செய்தி:>சாலை பாதுகாப்பு மசோதாவில் கடும் விதிமுறைகள்: எதிர்ப்புக்கு பணிந்து பின்வாங்குமா மத்திய அரசு?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அப்துல் ஃபாதா கருத்து:

இது ஒரு அற்புதமான மசோதா. உலகின் எல்லா நாடுகளிலும் உள்ளதுபோல் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ரூல்ஸ், இப்படி பட்ட சட்டங்களால் மட்டுமே இந்தியாவில் விபத்துகளை தவிர்க்க முடியும். இந்தியாவில் மட்டும்தான் வண்டி ஓட்டத் தெரிந்தால் போதும். சாலைவிதிகளை பின்பற்ற மாட்டார்கள் நம் மக்கள்.

இரு சக்கர வாகனங்கள் எட்டு போட தெரிந்தால் போதும் லைசென்ஸ் கிடைத்துவிடும் எல்லா வாகன ஓட்டிகளும் தவறுதலாக ஓவர் டேக் பண்ணுகிறார்கள். இடப்பக்கம் ஒரு வண்டி போய்க்கொண்டு இருக்கும்போது, அதை விட்டு அதே இடது பக்கம் வண்டியை மோதுவது போல் ஓவர் டேக் பண்ணுகிறார்கள்.

இரவில் அதிகமான ஒலியுடன் லைட் வைக்கிறார்கள். விதவிதமான நிறங்களில் ஹெட் லைட் இதய நோயாளிகளை கடுமையாக பாதிக்கும். ஹரன்கள் உபயோகப் படுத்துகிறார்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மற்றவர்களுக்கு மரணம் மற்றும் இழப்பீடு செய்ய முடியாத உறுப்பு இழப்பை ஏற்படுத்துகிறார்கள்.

ஒரு தெருவில் இருந்து ஒரு ரோடு கிராஸ் பண்ணும்போது ஹால்ட் அண்ட் கோவை பின்பற்றுவதில்லை. ஹிட் அண்ட் ரன் டிரைவிங் அதிகமாக உள்ளது உலகத்திலேயே இங்குதான். அதனால் சாலை விதிகளை கடுமையாக்கி சட்டங்களைப் போட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x