Published : 25 May 2015 05:08 PM
Last Updated : 25 May 2015 05:08 PM

நகைகளுடன் ரயில் பயணமா? எச்சரிக்கை! - பாலன்

செய்தி:>ஜோலார்பேட்டை அருகே 2 ரயில்களில் பெண்களிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு: தொடரும் கொள்ளையால் பயணிகள் பீதி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலன் கருத்து:

பொதுவாக ரயில் பயணத்தின் போது நகை அணிவது அவசியம் இல்லை. அதுவும் இரவு பயணத்தில், தூக்கத்தில் அவசியம் இல்லை. சூட்கேஸ் போன்ற பூட்டும் வசதி கொண்ட பெட்டிகளில் வைத்து பூட்டி, ரயில் பெட்டி பட்டாக்க்களுடன் சங்கிலி மூலம் இணைத்து விட்டு உறங்கலாம்.

அதே ரயில் பெட்டியில், உள்ள இதர நகை அணியாத பெண்களிடம், மர்ம நபர் கைவரிசை காட்டவில்லை. வியர்வை சிந்தி, கஷ்ட்டப்பட்டு உழைத்து, நகை வாங்கி போட்டு அழகு பார்க்கும் கணவன்மார்கள், இது போல ரயிலில் பயணம் செய்யும் மனைவிமார்களுக்கு, அன்றாடம் வரும் செய்திகளை படித்தும், எச்சரித்து அனுப்ப மறுப்பது ஏன்?

ரயில் பெட்டிகளில், 3 மொழிகளில், பெண்கள் தூங்குகிற மாதிரி படம் போட்டு, முகமூடி அல்லது ஹெல்மெட் அணிந்த நபர் நகை பறிக்கும் காட்சியை, தூங்கும் பெர்த்துக்கு பக்கவாட்டில் ஒட்டி வைத்து எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கலாம். படம் இல்லை என்றால் மொழி தெரியவில்லை என லாஜிக் பிரச்னை வரலாம்!!

உலகத்திலேயே இந்தியப்பெண்கள் தான் அதிக நகைகளை, அதுவும் வீட்டில் வைத்திருப்பதாக தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். காலத்திற்கு ஏற்றவாறு நமது அடிப்படை பழக்கங்களில் மாற்றம் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x