Published : 05 May 2015 07:35 PM
Last Updated : 05 May 2015 07:35 PM

அந்நிய முதலீடுகளால் நாட்டுக்கு நஷ்டம்தான்: அப்துல் ரஃமான்

கட்டுரை:>கெய்ர்ன் இந்தியா வரி விவகாரம் அந்நிய முதலீடுகளைப் பாதிக்குமா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அப்துல் ரஹ்மான் கருத்து:

இப்படி செய்தால் அந்நிய முதலீடு வரும் ஆனால் வராது. இதே போல வருமான வரியும் வரும் ஆனால் வராது. இது ஒரு தவறான முன்னுதாரணம்.

அந்நிய முதலீடு நம் நாட்டுக்கு தேவை தான் ஆனால் வருமான வரி கட்டாத அந்நிய முதலீடு நமது நாட்டுக்கு நஷ்டம் தான். அவர்கள் வரும்போது இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு என்று நமது நாக்கில் தேன் தடவி விட்டு வருகிறார்கள்.

குறைவான ஆட்களுக்கு வேலை வாய்ப்பை தந்துவிட்டு, (1) தடையில்லா மின்சாரம் (2) குறைந்த வாடகையில் நிலம் (3) குறைந்த சம்பளத்தில் ஆட்கள் (4) வரியில்லா வருமானம் (5) நம் நாட்டு சுற்று சூழல் பற்றிய கவலை பட வேண்டிய அவசியமும் இல்லை இன்னும் பல வசதிகளை கொடுத்து இந்திய அரசாங்கம் ஏன் நாட்டை தவறான வழி நடத்தி செல்ல வேண்டும்.

மேற்படி செய்யும் சலுகைகளை கணக்கிட்டால் இந்தியர்களின் வேலை வாய்ப்பு என்பது வெறும் பூஜ்யம் GDP தான் மிஞ்சும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x