Published : 08 May 2015 01:27 PM
Last Updated : 08 May 2015 01:27 PM

சாதி தலைவர்கள் முதல்வராக முடியாது: துரைராஜ்

செய்தி:>கண்டுகொள்ளாத ஸ்டாலினுக்கு 'தகுதிப் பட்டியல்' உடன் அன்புமணி 3-வது கடிதம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் துரைராஜ் கருத்து:

ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி சிறிய அரசியல் கட்சிகளுக்கு கூட ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற அபரிதமான நம்பிக்கையைக் கொடுத்துவிட்டது. யூனியன் பிரதேசமான டெல்லியில் இருக்கும் மக்கள்தொகை, இன வேறுபாடுகளை மறந்த நகர சூழ்நிலை என்று சில சூழ்நிலைகள் ஆட்சியை பிடிப்பதற்கு ஏதுவாகிவிட்டது.

மற்றபடி அந்தக் கட்சியினால் வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. இது புரியாமல் நம் அரசியல்வாதிகள் ஆம் ஆத்மியைப் போன்று ஏதாவது பேசினால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் எப்படி?

தமிழ்நாட்டில் பொதுவான சில ஜாதிகளைத் தவிர பெரும்பான்மை ஜாதியைச் சார்ந்த தலைவர்கள் முதல்வர் ஆவது நடக்காத விஷயம். கடந்த காலங்களில் வேண்டுமானால் இது சாத்தியமாயிருக்கலாம். தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் கூட ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்டவர்தான்.

நிலைமை இப்படியிருக்க வட மாவட்டங்களில் மட்டும் வலுவாக இருக்கும் பாமகவின் அன்புமணி அவர்கள் ஆட்சியை தனியாக பிடித்துவிடலாம் என்று நினைத்து அதற்காக சில விளக்கங்களையும், விவாதங்களையும் கடிதம் எழுதுகிறேன் என்ற பெயரில் ஆரம்பித்திருப்பது எந்தப் பயனையும் தராது என்பதுதான் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x