Published : 06 May 2015 06:11 PM
Last Updated : 06 May 2015 06:11 PM

எதையாவது ஊதி பெரிதாக்கும் சில ஊடகங்கள்: கே.ஷான்

செய்தி:>செய்தி சேனல்களிடையே போட்டி சூடு பிடிக்கிறது விளம்பர யுத்தம்: டைம்ஸ் நவ் - என்டிடிவி மோதல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கே.ஷான் கருத்து:

செத்தவன் வீட்டில் போய் உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது, அடிபட்டவனிடம், எப்படி அடி பட்டது - எப்படி வலிக்கிறது, பலவந்தம் செய்யப்பட்டவரிடம் கோனாங்கி தனமான கேள்வி கேட்பது, வறட்சி பாதிக்கப்பட இடத்தில் மக்கள் உணர்வை சொரிந்து பார்ப்பது. இப்படித்தான் இருக்கிறது அனைத்துக் காட்சி ஊடங்கங்களும். இதில் வடிவேலு பாணியில் நான் நம்பர் 1 டுபாகூர் என வரிசை படுத்த முடியாது.

இவர்கள் வீட்டில் ஒருவர் அடிபட்டால் அல்லது மானபங்கபடுத்தபட்டால் இந்த மாதிரி தான் நடந்துகொள்வார்களா. தங்களை முன் நிறுத்த என்ன வேண்டுமானாலும் செய்கின்றன இந்த காட்சி ஊடகங்கள். சமூக பொறுப்பு என்னவென்று முதலில் இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒருவரை பற்றி அல்லது ஒரு விசயத்தை கிழி -கிழி என்று கிழிக்கத்தான் இவர்கள் முயல்கிறார்கள். தினமும் தீனி போட ஏதாவது ஒன்றை ஊதி பெரிதாக்குகின்றன சில ஊடகங்கள். இன்னொன்று கிடைத்துவிட்டால் அதை அப்படியே போட்டுவிடுவது. இந்த லட்சணத்தில் தான் இயங்குகிறார்கள். பிரச்சனை தீர வழி என்ன என்பதை அத்தி பூத்தால் போல செய்கிறார்கள். செய்திக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x