Published : 19 May 2015 06:41 PM
Last Updated : 19 May 2015 06:41 PM
கருத்துக்கணிப்பு:>குடும்பத் தொழில்களுக்கு விலக்கு சரியா?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஹசன் அப்துல்லா கருத்து:
பெரும்பாலும் பெற்றோர்கள் வருமானத்திற்காக தன் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது நடக்கும், குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் கல்வி உரிமை சட்டத்திற்கு பயந்து பணிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்பி வந்தனர், இப்போது இந்த சட்டம் காரணமாக சிறிது சிறிதாக அவர்கள் பள்ளிக்கு வருவது குறைந்துவிடும்.
14 வயதில் அவன் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்ததும் படிப்பில் நாட்டமில்லாமல் அதே வேலையை தொடர்ந்து செய்வான், ஆக காலம் காலமாக கூலித் தொழிலாளியாகவே தான் இருப்பான். மறைமுகமாக இது குலத்தொழில் முறையை புகுத்துகிறது.
சில கைத்தொழில் குடும்பங்கள் தனியாக வீட்டில் கைத்தொழில் செய்ய முடியாமல் சிறு முதலாளிகளின் சிறு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்கள். இச்சட்டப்படி, இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் அவர்கள் வீட்டிற்குச் சென்று வேலை பார்ப்பது குற்றம்.
ஆனால் இவர்களின் பெற்றோர்கள் அவ்வேலையை வாங்கி வந்து தன் வீட்டில் தன் குழந்தைகளை கொண்டு வேலை வாங்கினால் அது குற்றமில்லை. ஆக மறைமுகமாக இது குலத்தொழில் முறையை கொண்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT