Published : 04 May 2015 03:12 PM
Last Updated : 04 May 2015 03:12 PM

விவசாயத்தை லாபகரமாக்குங்கள்: சுவாமிதாசன் ஃபிரான்சிஸ்

செய்தி:>வளர்ச்சி வேண்டும் என்றால் நிலம் வேண்டும்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுவாமிதாசன் ஃபிரான்சிஸ் கருத்து:

தேசத்தின் வளர்ச்சி என்று இவர் வர்ணிப்பது சீன தேச மாதிரியான தொழில்மய உற்பத்திப் பெருக்கம் அடிப்படையாகவே உள்ளது.

அதைத்தான் மோடி அரசு மேக் இன் இந்தியா' என்ற கனவுத் திட்டமாக விற்பனை செய்ய முயற்சிக்கிறது. நில உரிமையாளர்களின் சம்மதமே இல்லாமல் நிலங்களைக் கையகப் படுத்தும் அரசின் அதிகாரம் தான் எதிர்ப்புக்குள்ளாகிறது. காரணம் இது ஜனநாயகத்துக்கும், நமது அடிப்படை உரிமைக்கும் எதிரானது.

லாபமில்லால் நடக்கும் விவசாயத் தொழிலை விடுங்கள், உங்கள் நிலங்களை தொழில் வளத்துக்காக கொடுங்கள், தொழில் அதிபர்களிடம் கூலித் தொழிலாளியாக இருங்கள் என்று சொல்வதை விட, தன் உழைப்பை, தன் நிலத்தில் போட்டு சிறு முதலாளியாக இருக்கும் விவசாயி செய்யும் விவசாயத் தொழிலையே வளமும், லாபகரமாவும் ஆக்குங்கள்.

அதற்கான மாற்றுத் திட்டங்களையும் அரசு கொண்டு வரவேண்டும். இதனால் அந்நிய முதலீட்டை நம்பி கூலித்தொழிலாளிகளாக இந்தியனை மாற்றும் அவலம் மாறும். நமது கிராமங்கள் விவசாய விளைபொருள் உற்பத்தி மையங்களாக மாறி முதுகெலும்பாக நம் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும். இந்தியர்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் இந்த திட்டம் மக்கள் விரோத சட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x