Published : 13 May 2015 07:15 PM
Last Updated : 13 May 2015 07:15 PM

சாதாரண மக்களின் நம்பிக்கை இனி என்னவாகும்?- பாலகிருஷணன்

செய்தி:>ஜெயலலிதா வழக்கு மட்டும் விரைவாக விசாரிக்கப்பட்டது எப்படி?- உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் கேள்வி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலகிருஷ்ணன் கருத்து:

சமீபகால நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. பணம்பதவி பெற்றோருக்கு ஒரு நீதி, ஏழை, எளியோருக்கு ஒரு நீதி என்ற பாகுப்பாடு காட்டப்படுவதாகவே தெரிகிறது. சல்மான்கான் குடித்துவிட்டு காரை ஓட்டி உயிரிழப்பு, மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு வழங்கப்பட்ட தண்டனை இரண்டே நாட்களில் உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 18ஆண்டுகளுக்குப்பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றமே காலக்கெடு விதிக்கிறது. வழக்கு விசாரிக்கப்பட்டு இரண்டே நிமிடங்களில் நீதிபதி தீர்ப்பை சொல்லிவிட்டு வெளியேறுகிறார். எந்த குற்றமும் செய்யாமல் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட நூற்றுக்கணக்கான அப்பாவிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பணம் படைத்தோர், பதவியிலுள்ளோர் தண்டிக்கப்பட்டு விட்டால். நீதி விரைவாக வேலை செய்கிறது. சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களே என்ற பெருமையும் பறிபோகுமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x