Published : 26 May 2015 06:27 PM
Last Updated : 26 May 2015 06:27 PM

நிலவிலிருந்து தண்ணீர் வரப்போவதில்லை - முத்து

கட்டுரை:>சென்னை தண்ணீர் பிரச்சினை: ஓர் ஆய்வு சொல்லும் விழிப்புணர்வு தகவல்கள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் முத்து கருத்து:

மக்கள் தொகை அதிகமாகிறது. அதை கட்டுப்படுத்தினால் தான் இதற்கெல்லாம் தீர்வு. வேறு ஒன்றும் எவராலும் செய்ய முடியாது. இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும். சொல்லப்போனால் உலகம் முழுமைக்கும் இச் சட்டம் கொண்டு வரவேண்டும்.

மக்கள் பெருக்கத்தினால் இயற்கை வளங்கள், தாவரங்கள், ஏனைய உயிரினிங்கள் அனைத்திலும் மிகப்பெரிய அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த அழுத்தத்தை எப்பொழுது சரி செய்யப் போகிறோம்? ஒருக்காலும் முடியாது. இப்பொழுதே மீண்டும் சரி செய்யவே முடியாத அளவிற்கு இப் பூமியை நாசம் செய்தாகிவிட்டது.

இப்பூமியை விட்டால் வேறு ஒரு இடமும் இல்லை மனிதன் வாழ்வதற்கு. இந்த தண்ணீர் பிரச்சனைகளை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அரசியல்வாதிகள் என்ன கடவுளா? பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எது எடுக்கப்படுகிறதோ அது இங்கிருந்தே எடுக்கப்படுகிறது. அதிகார வர்க்கம் நிலவிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்போவதில்லை. இப்பூமி எத்தனை கோடி மக்களுக்குத்தான் உணவும் தண்ணீரும் கொடுக்கும்? திணறிக்கொண்டிருக்கிறது பாவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x