Published : 18 May 2015 07:58 PM
Last Updated : 18 May 2015 07:58 PM

வயதானவரை தாக்குதல் சரிதானா?- கண்ணன்

செய்தி:>பூணூலை அறுத்ததாக கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கண்ணன் கருத்து:

பிரம்மத்தை உணர விழைபவர்கள் அணியும் சீருடை பூணூல் எனும் உபவீதம். ராபர்ட் -டி-நொபிலி என்பாரை அறிவீரோ? இத்தாலி நாட்டில் பிறந்து, 1606ல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலி. காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார்.

அப்போது அந்த வெள்ளையரை யாரும் பூணூல் அணியாதே என யாரும் விரட்டவில்லை .மற்றொரு அறிஞர் சீகன்பால்கு ஐயர் (Ziegenbalg) தன் இயற்பபெயரோடு அய்யர் என்பதையும் இணைத்துகொண்டபோதும்தான்.

ராமசேனா என்று கூறிக்கொள்பவர்களின் செயலை இங்கு தாக்கப்பட்ட முதியவர்கள் ஆதரித்ததற்கு சாட்சி உண்டா? வயதானவரை தாக்கியது சரிதானா? 70 வயதுக்காரர் திருப்பித்தாக்க மாட்டார் எனும் ஆதிக்கத் திமிர்தானே அந்த கயவர் செயலுக்குக் காரணம்?

இப்போதும் குறிப்பிட்ட சாதியல்லாதார் பூணூல் அணிந்தார் எனத் தாக்கப்படுவதில்லையே. ஆக மொத்தம் இந்த தாலி பூணூல் அறுப்பு எல்லாமே அந்நிய சக்திகளின் பணத்துக்காக ஆசைப்பட்டு சில சமூக விரோதப் புல்லுருவிகள் செய்வதாகவே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x