Published : 18 May 2015 05:16 PM
Last Updated : 18 May 2015 05:16 PM

மோடி ஆட்சி... யாருக்கான வளர்ச்சி? - மொஹிதீன்

செய்தி:>ஓராண்டு ஆட்சி எப்படி?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மொஹிதீன் கருத்து:

தீக்குச்சி, பட்டாசு, நோட்டுபுத்தகம், எவர்சில்வர், பிரட் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, ஊறுகாய், மாவு தயாரிப்பு, பர்னிச்சர் என 20 பொருட்களை சிறுதொழில் பட்டியிலிருந்து மோடி அரசு நீக்கி உள்ளது. இனி மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த தொழில்களில் ஈடுபடலாம்.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இந்த தொழில்களை நம்பி பல லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கை இனி கேள்விக்குறி ஆக்கி உள்ளது மோடி அரசு. ஏற்கனவே தங்கம் முதல் தண்ணிப்பாக்கெட் வரை புகுந்து விளையாடும் டாடா போன்ற நிறுவனங்கள் இந்த அறிவிப்புக்கு பின் என்ன செய்வார்கள் என சொல்லவா வேண்டும்…

சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம், டீசல் விலை நிர்ணய உரிமையினை தாரைவார்த்தல், தொழிலாளர் நலச்சட்டத்திருத்தம், ரயில்வே உள்ளிட்ட அனைத்திலும் அந்நிய முதலீடு என நித்தம் நித்தம் மோடி அரசு விரைவாக கார்ப்பரேட்களுக்கு நாட்டை தாரைவார்த்துவருகிறது. இதைப் பார்க்கும் போது மிச்சமுள்ள 4 ஆண்டுகளில் நாட்டில ஏதாச்சும் மிச்சமிருக்குமா என யோசிக்க தோன்றுகிறது.

இது ஒருபுறம் என்றால் காஷ்மீர் 370 பிரிவை நீக்குவது என ஆரம்பித்து, மாட்டிறைச்சிக்கு தடை வரை அன்றாடம் 'ஒரே நாடு அது இந்து நாடு' என இந்தியாவை மாற்றுவதற்கு மோடி அரசு நடவடிக்கைகள் மறுபுறம். மோடியை சொல்லி குற்றம் இல்லை, குஜராத்தில் அவர் என்ன செய்தாரோ அதைதான் இன்று இந்தியா முழுவதும் செய்கிறார்.

ஆனால் மோடி வந்தா நாடு வல்லரசு ஆகிவிடும், நாடு ஏரோப்பிளேனில் பறக்கும் என கையை ஆட்டி ஆட்டி பேசியவர்கள், துண்டை தூக்கித் தூக்கி பேசியர்களை தான் நாம் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

இதுவரை 100 பேருக்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களை வேலையினை விட்டு தூக்க அரசின் அனுமதி தேவை. இதனை இனி 300 பேருக்கு மேல் வேலைசெய்தால் மட்டுமே அனுமதி வேண்டும் என திருத்த உள்ளது மோடி அரசாங்கம். தொழிலாளர் நலச்சட்டங்களில் தொடர்ந்து முதலாளிகளுக்காக திருத்தம் மேற்கொண்டு வரும் மோடி அரசின் நெக்ஸ்ட் ஆக்‌ஷன் இது.

இதை பற்றி கேட்டா, எப்பவும் போல நாடு வளர வேண்டாமா சார்..? என நம்மை திரும்ப கேட்பார்கள் பாஜக கட்சியினர். வளர்ச்சி, வளர்ச்சி என இவர்கள் சொல்வது யாருக்காக என இவர்கள் சொல்லுவது இன்னுமா நமக்கு தெரியவில்லை…?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x