Published : 07 May 2015 03:19 PM
Last Updated : 07 May 2015 03:19 PM

தரமிறங்கும் பிஸ்என்எல்: பி. திருநாவுக்கரசு

செய்தி:>பிஎஸ்என்எல் சேவை குறைபாடுகள்: மக்களவையில் பாஜக சாடலை வரவேற்ற எதிர்க்கட்சிகள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பி.திருநாவுக்கரசு கருத்து:

பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு முற்றிலும் சரியே. மத்திய ஆட்சியாளர்கள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டுடைமையான வங்கிகள் ஆகட்டும் தொழில்நுட்பத் தரக்குறைவாக உள்ளன. ஆட்குறைப்பு போன்ற அக்கறையற்ற நடவடிக்கைகளால் சீரழித்து வருகின்றன.

இந்த தரக்குறைவான உட்கட்டமைப்புச் சூழலில் லாப நோக்கை மட்டும் இலக்காக வைத்துள்ளார்கள். இதனால் பொதுமக்களுக்கு வழங்கிவந்த சமூக முன்னேற்றச் சேவைகளையும் சலுகைகளையும் முற்றிலும் நீக்கிவிட்டனர். தனியார் நிறுவனங்கள் இதன் மூலம் விளம்பரம் இல்லாமலேயே அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள வழிவகுக்கின்றனர்.

காலப்போக்கில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப் படுகின்றன. அரசும் பன்முக வரிகள், சேவை வரி என மக்களைச் சுரண்டும் நிதிநிலைப் பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதனால் தனியார் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தி பெரும் கொள்ளையடிக்க வாசல்களைத் திறந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x