Published : 25 May 2015 05:09 PM
Last Updated : 25 May 2015 05:09 PM
கட்டுரை:>மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்ப்பதா? - புதிய திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி
'தி இந்து' ஆன்லைன் வாசகர் டாக்டர் எம்.தாஸ் கருத்து:
இப்பொழுது எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் அனைத்து தனியார் பள்ளிகளும் சென்ட்டம் என்று தம்பட்டம் அடித்துகொள்கின்றன. மந்திரிமார்களும் தனியார் பள்ளிகளைப் புகழ்கின்றனர். சென்ட்டம் என்று சொல்லிகொள்ளும் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட குரூப் மட்டுமே இருக்கும்.
அதாவது பெரும்பான தனியார் பள்ளிகளில் Maths, physic, chem, biology or Maths, phy, chem, comp.science ஆகிய பிரிவுகள்தான் இருக்கின்றன. commerce group இருப்பதில்லை. VOCATIONALGROUP இருக்காது. ஆனால் அரசு பள்ளிகளில் குரூப் 1,2,3 vocational group ம் இருக்கும். எல்லாவற்றையும் எல்லாத் தர மாணவர்களையும் சரிசெய்து கொண்டு ரிசல்ட்-ஐக் கொடுக்கும் அரசுப் பள்ளி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
தனியார் பள்ளிகள் அனைத்திலும் commerce மற்றும் Vocational group ஐயும் கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்ற உத்தரவை போட்டுவிட்டு அப்போது வேண்டுமானால் தேர்வு முடிவுகளில் அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT