Published : 14 May 2015 09:18 AM
Last Updated : 14 May 2015 09:18 AM
* சல்மான் கான் வழக்கைப் பற்றிக் காரசாரமாக ஆளுக்கொன்றாக நாம் விவாதித்துக்கொண்டிருக்கலாம். சல்லுவுக்கு எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ள நேரமில்லை. ஐயா இப்போது காஷ்மீரில் ஆடிக்கொண்டிருக் கிறார், கரீனாவோடு. ‘பைஜ்ரங்கி பைஜான்’ படப்பிடிப்பில். உங்களுக்குத்தான் பாஸ் இது நாடு!
* சாதி யாரையும் விடாதுபோல இருக்கிறது. ‘தியே ஜல்தே ஹைன்’ என்ற 128 அத்தியாயங்கள் கொண்ட தொடருக்கு தூர்தர்ஷன் அனுமதி வழங்கியிருக்கிறது. இதில் என்ன ‘விசேஷம்’ என்று கேட்கிறீர்களா? ‘கன்ச்சி’ என்ற சாதியைப் பற்றியது இந்தத் தொடர். பிரதமர் மோடியின் சாதி இது!
* முதல் இந்திய நகரமாகியிருக்கிறது ஹைதராபாத். எதில்? ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’வில் இணைவதில். தாஜ்மஹால், குதுப் மினார் போன்ற சுற்றுலா மையங்களில் மட்டுமே இந்தச் சேவையை இந்தியத் தொல்லியல் கழகத்துடன் இணைந்து கூகுள் வழங்கிக்கொண்டிருந்தது. இப்போது ஒரு மாநகர அளவில் இந்தியாவில் இந்தச் சேவை விரிகிறது.
* ஒருவழியாக அரிந்தம் சௌத்ரி சிக்கியிருக்கிறார். கார்ப்பரேட் குரு, பத்திரிகை டான், ஐஐஎம்க்கு எல்லாம் சவால் விடும் ஐஐபிஎம் கல்வி நிறுவனத்தின் தந்தை என்றெல்லாம் சுற்றிக்கொண்டிருந்தவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் ரொம்ப காலமாகவே சொல்லப்பட்டுவந்தன. அரசியல் செல்வாக்கால் தப்பித்துக்கொண்டிருந்தவர் மீது, இப்போது டெல்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிந்திருக்கிறது. மாணவர்களுக்குத் தவறான தகவல்களைத் தந்து ஏமாற்றிவிட்டதாக யூ.ஜி.சி. கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில்!
* எதிர்க்கட்சி இல்லாத மாநிலமாக ஆகியிருக்கிறது நாகாலாந்து. அது மட்டுமல்ல; காங்கிரஸும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கும் அதிசயமும் முதன்முறையாக இருந்திருக்கிறது. நாகாலாந்து முதல்வர் ஜெய்லியங், தனது தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் சமீபத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டார். இந்தக் கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது!
* மோடியோடு மம்தா ராசியான பின்னணி என்ன? வங்காளிகள் சொல்லும் பின்னணி இது. இந்தியா-வங்கதேச நிலப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ரூ.3,009 கோடியை மேற்கு வங்கத்துக்கு இழப்பீடாக வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறாராம் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT