Published : 08 May 2015 01:27 PM
Last Updated : 08 May 2015 01:27 PM

கடமைகளை மறந்து உரிமைகளைப் பேசாதீர்: பூக்காரன்

செய்தி:>திருப்பூரில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த மாவோயிஸ்ட் தம்பதி: விசாரணையில் அம்பலம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பூக்காரன் கருத்து:

வெளிமாநிலத்தவர் அல்லது வெளியூர் ஆட்கள் தங்க இடமளிப்போர் அதன் விபரத்தை காவல் நிலையங்களுக்கு அளிப்பதை சட்டபூர்வ கட்டாயமாக்க வேண்டும். சென்னையில் இது போல கணக்கெடுக்க முயன்ற போலிசுக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம் நடத்திய விந்தையான சம்பவமும் நடந்தது.

தீவிரவாதிகள் அப்பாவி, நிராயுதபாணிகளான பொதுமக்களை ஈவு இரக்கமில்லாமல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதி என்று குண்டுகள் வைத்து கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் போது "மனித உரிமைகள்" பற்றி வாய்திறக்காத உத்தமர்கள் தீவிரவாதி கயவர்களை சுட்டுக் கொல்லும் தருணங்களில் "மனித உரிமைகள்" பற்றி வாய்கிழிய பேசும் அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழும். அமைதியாக வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது.

உரிமைகளை பற்றிப் பேசும் முன் கடமைகளைப் பற்றியும் பேச வேண்டும். கடமைகளை செய்யாமல் உரிமைகளைப் பற்றியே வாய்கிழிய பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்காது. ஆயுதம் தாங்கிய இவர்களும் அது பற்றி சிந்திப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x