Published : 25 May 2015 05:08 PM
Last Updated : 25 May 2015 05:08 PM
கட்டுரை:>அழியும் தருவாயில் ‘ஆற்று மீன்களின் அரசன்’! - காவிரியின் கவுரவத்தை பாதுகாக்க கோரிக்கை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் எழிலன் கருத்து:
உயிரினங்களிலேயே மனித இனம்தான் அறிவியலின் பெயரால் தனக்கும் இதர இயற்கையின் செல்வங்களுக்கும் கால நிலைகளின் ஒழுங்கமைப்புக்கும் சவால்விடுத்துவருகிறது. அதுமட்டுமின்றி இயற்கைக்கு சேதம் விளைத்தும் கடைசியில் தன்னையும் தனக்கு வாழ்வுதந்த இயற்கைக்கும் தனது ஒரேயொரு வதிவிடமான பூமிக்கும் ஆபத்தைத் தருகின்றது.
அதன் பலன்களை இயற்கைச் சீற்றமென்றும் நிலநடுக்கமென்றும் சுனாமியென்றும் இன்னும் பல வழிகளில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மனிதனைப் போல பள்ளி சென்று அறிவைத்தேடும் நிலையினின்று மாறுபட்டுத் தாங்களாகவே சரியாகத் திட்டமிட்டு வாழும் இதர சிறு மற்றும் பெரு உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்களின் இயற்கையை ஒட்டிய அறிவில் ஒரு வீதமாவது இவனுக்கிருந்தால் தன் வசதிக்காக இப்படி இயற்கையை அழிப்பானா?
இந்த இலட்சணத்தில் அரசியல் என்று சொல்லிக் கொண்டு இயற்கை வள அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.மனிதன் படைத்த பணம்தான் அவனை இப்படிப்பட்ட பாதகங்களுக்குத் துணிய வைக்கின்றது. சவடால் பேச்சுக்களை விடுத்து உயிராபிமான அணுகுமுறையுடன் மனிதாபிமானத்தையும் சேர்த்துத்தான் இதற்கு விடிவு காண வேண்டும். அரசு துணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். துணியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT