Published : 09 May 2015 02:55 PM
Last Updated : 09 May 2015 02:55 PM

ஆதார் அட்டைப் பணியில் குழப்பங்கள்: மன்னன் மேனன்



செய்தி:>திருப்பூரில் ஆதார் அட்டை பணியை துரிதப்படுத்தக் கோரி சாலை மறியல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மன்னன் மேனன் கருத்து:

இந்த ஆதார் அட்டை பணிகள் குழப்பமாக உள்ளன. பல இடங்களில் சரியான, தெளிவான விவரம் கிடைக்க மாட்டேன்கிறது. எப்பொழுது, எங்கு, எத்தனை மணிக்கு என்ற போன்ற விவரங்களை தெளிவாக சொன்னால் நெரிசல் குறையும். சென்ற வருடம் இதன் வலைதளம் தமிழ்நாடு பகுதி வேலை செய்யவில்லை. தமிழ்நாட்டின் சார்பாக புகார் கொடுத்து பின் அந்தப் பகுதி வேலை செய்தது.

ஆறு மாதங்கள் முன் நண்பர் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் மிக எளிதாக ஆதார் அப்டேட் செய்ய முடிந்தது. தற்பொழுது வேறு ஒரு நண்பர்க்கு அப்டேட் செய்ய கடந்த ஒரு வாரமாக முயற்சி செய்கிறேன். 'transliteration error' என்று வருகிறது. Toll free number மூலம் தமிழில் கேட்டால், அதிகாரியிடம் செல்லும் முன்பே அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. ஆங்கில மொழியில் கேட்டால் அந்த சாஃப்ட்வேர் கொஞ்சம் பிரச்சினை, நீங்கள் ஹைதராபாத்துக்கு தபாலில் அனுப்பி விடுங்கள் என்று கூறுகிறார்கள்.

வேண்டாம், சென்னையில் இடம் சொல்லுங்கள் நான் நண்பருக்காக நேரில் சென்று பதிவு செய்து கொள்கிறேன் என்றால் சென்னையில் நேரில் கிடையாது என்கிறார்கள் அஞ்சல் அனுப்பினால் உங்கள் புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என்று மட்டும்தான் பதில் வருகிறது. ஆதார் அட்டைப் பணியின் இந்த குழப்பங்கள் நீங்க அரசு அதிகாரிகள்தான் விரைந்து கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x