Published : 06 May 2015 06:11 PM
Last Updated : 06 May 2015 06:11 PM
செய்தி:>பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்த அச்சமா?- உளவியல் ஆலோசனைகளுக்கு 104 எண்ணை அழைக்கலாம்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் கருணாகரன் கருத்து:
இந்த அளவிற்கு வருவதற்குப் பெயரா கல்வி...??? முதலில் இந்தச் சாதாரண 10 மற்றும் 12 ம் வகுப்புத் தேர்வுகளுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? அழுத்தம் ? இதற்கெல்லாம் எதற்கு ஊடக வெளிச்சம்? முதல் மதிப்பெண்(?) எடுப்பவர்களுக்கு எதற்கு இவ்வளவு விளம்பரம்? அப்படி என்ன பெரிதாக சாதித்துக் கிழித்து விட்டார்கள் இந்தக் கல்விமுறையில்?
இல்லை, வாழ்க்கையில் பணம், பதவி, சொத்து, சுகம், கௌரவம் இவற்றால் வரும் மிதமிஞ்சிய கர்வம் என்பதை விட இவர்கள் தேடுவதும் அடைவதும் வேறென்னவாக இருந்துவிடப் போகிறது ? சத்தமில்லாமல் தேர்வு முடிவுகளை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டுப் போகவேண்டியது தானே? கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் சத்தமில்லாமல் வெளிவருவதைப் போல...?
மேற்படிப்புச் சேர்க்கைக்கும் தர வரிசைக்கொரு ஊடக விளம்பரம் எனப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? தேர்வு முடிவுகளில் தொடங்கி பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளுக்கான சேர்க்கை வரையில் மாநில முதல் மதிப்பெண், தர வரிசை என அரசும், இந்தக் கேடு கேட்ட மக்களும், ஊடகங்களும் செய்யும் அழிச்சாட்டியம் இருக்கிறதே, அட இறைவா...! கல்வி...இன்று இது ஒரு மனநோய்...!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT