Published : 30 May 2015 02:36 PM
Last Updated : 30 May 2015 02:36 PM
> ட்வீட்டாம்லேட்: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு பெருகும் ஆதரவு
'தி இந்து' ஆன்லைன் வாசககர் ஈஸ்வர் கருத்து:
இங்குள்ளோர் அரசியல் பல்கலை வளாகத்தில் தேவையில்லை என்பது எந்த நிலையிலானது? இது ஒரு விவாதக் குழுமம். விவேகானந்தர் விவாதக் குழுமமும் தமிழ் குழுமமும் அங்கே உண்டு. அது போக, முதலில் படிப்பவர்கள் அரசியல் பேசக் கூடாது எனில் யார் தான் அரசியல் பேச வேண்டும் என்கிறீர்கள்.
அரசியல் பின்னணியிலான செயல்பாடு (அதுத் தவறாகவும் இருக்கலாம்) என்பது வேறு, அதை நோக்கிய மாற்றத்தைப் பார்ப்பதும் வேறு, சமூகத்தில் நடப்பவைகளை நடந்தவைகளை விவாதிப்பது என்பது வேறு. இது போன்ற விசயங்கள், அரசியற் பொருளாதார ஆய்வுகளைத் தடுப்பதற்கு சமானம்.
பெரும்பாலும் இது போன்ற குழுமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர்கள் ஆராய்ச்சியாளர்கள், இது போன்ற ஆய்வில், பின்னர் ஈடுபட விரும்பும் இளநிலை முதுநிலை மாணாக்கர்கள். எனக்கு ஆன்மீகம் முதல் கம்யூனிசம், அறிவியல், மொழியியல், சமூகவியல், இவையெல்லாம் கலந்த பல்துறை ஆய்வு விவாதங்கள் வரை என்னுடைய ஆய்வுப் பொருளாய் இருந்தே வந்திருக்கிறது, அதற்குக் காரணம் ஒரு காலத்தில் இது போன்ற பல அமைப்புகளில் நான் இருந்தது தான். உணர்ச்சிவசப்பட்டு அரசியல் வேலைகள் செய்யும் அரசியல் தொண்டன் போல் பார்ப்பதை நிறுத்துங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT